சென்னை புலியந்தோப்பு பகுதியில் 6 வயது சிறுவனை 5 இடங்களில் நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை புலியந்தோப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஹரீஷை, அவ்வழியே நடைப்பயிற்சிக்கு வந்த வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியது. இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு எழும்புர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹரீஷுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்த 10 வயது சிறுவன், கவனக் குறைவாக செயல்பட்ட சிறுவனின் தாய் பிரீத்தா, பாட்டி ஸ்டெல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாய் ப்ளூ கிராஸிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.