tamilnadu

img

ஆவணப்படம் திரையிடல்

ஆவணப்படம் திரையிடல்

கோவை, அக்.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களின் பொது வாழ்வைபேசும் கடல் போல ஆவணப்படம் திரையிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு, உபக்குழுக்கள், இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச்  செயலாளர்கள் ஆகியோருக்கான சிறப்பு பேரவை கூட்டம்  கோவை காந்திபுரம் மலையாளிகள் சமாஜத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஐய்குமார் தலைமை தாங்க, கே.எஸ்.கனக ராஜ் துவக்க உரையாற்றினார். கட்சியின் மத்திய, மாநிலக் குழு முடிவுகள் குறித்து மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்டக்குழு முடிவுகள் குறித்து பேசி னார். இதில், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக் குழு  உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள், கிளைச் செய லாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இக்கூட்டத்தில், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மாவட்ட முன்னாள் செயலாளருமான மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களின் பொது வாழ்வை பேசும் கடல் போல ஆவணப்படம் திரையிடப்பட்டது.