tamilnadu

img

அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பாற்றிய மருத்துவர்கள்

அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட  சிறுமியை காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை, ஆக.20- ‘ப்ளூம் சிண்ட்ரோம்’ என்ற அரிய மரபணு கோளா றால் பாதிக்கப்பட்ட தமிழ கத்தை சேர்ந்த 12 வயது சிறு மியின் உயிரை சென்னை யில் உள்ள எம்ஜிஎம் புற்று நோய் மையம் காப்பாற்றியுள்ளது.  சிறுமியின் தம்பியிட மிருந்து பெறப்பட்ட உயிர் காக்கும் ஸ்டெம் செல் களைப் பயன்படுத்தி டிசி ஆர்ஆல்ஃபா பீட்டா செல்கள் நீக்கப்பட்ட பாதி மர பணுப் பொருத்தமுள்ள எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (பிஎம்டி) எனப்படும் ஒரு சிக்கலான மருத்துவ செயல்முறையை மருத்துவர்கள் மேற்கொண் டனர். உலகெங்கிலும் குழந்தை நோயாளிகளி டையே இத்தகைய மாற்று அறுவை சிகிச்சையை செய்து  மருத்துவ ஆவணங் களில் முதல் ஆவணப்படுத் தப்பட்ட  ஒரு வெற்றிகரமான சிகிச்சையாக இது திகழ்கி றது என்று மருத்துவ மனை யின் புற்றுநோயியல், ரத்தம் மற்றும் மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைத் துறை யின் தலைவர் மருத்துவர் எம். தீனதயாளன் கூறினார். சென்னையைச் சேர்ந்த இந்த சிறுமிக்கு 10 வயதான போது இக் கோளாறு இருப்பது கண்ட றியப்பட்டது.   இருப்பினும், இச்சிறுமியின் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச் சைக்குப் பொருத்தமான தானமளிப்பவரைக் கண்டு பிடிப்பது சவாலாக இருந் தது.  மேலும் இச்சிறுமியின் பெற்றோர் இருவருமே மர பணு மாற்றத்தைக் கொண்டி ருப்பவர்களாக இருந்தனர். இந்த பாதிப்பு இல்லாத  அந்த சிறுமியின் சகோத ரன் எலும்பு மஜ்ஜையை தானமாக  பெற்று இந்த சிறுமிக்கு பொருத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.  ஓராண்டுக்கு பிறகு அந்த சிறுமி முழுவதுமாக நல மாகி பள்ளிக்கு செல்கிறார். மருத்துவ நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படும்  இதழ்களில் ஒன்றான ‘Pediatric Blood and Cancer’-இல் இந்த சிகிச்சை வெளியிடப்பட்டுள்ளது.