சென்னை,ஆக.17- கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் வெள்ளி முதலே நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங் களை முன்னெடுத்துள்ளன.
அந்த வகையில் சனிக்கிழமையன்று (ஆக.17) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்திற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் அழைப்பு விடுத் திருந்தது. அவசர சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளி கள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறவில்லை. இதனால், நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப் பட்டது. தமிழகத்தில், சென்னையில் ராஜீவ் காந்திஅரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவ மனை, ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதேபோல், சென்னை குரோம்பேட்டை யில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனை யில், ஏராளமான மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிக அவசர சிகிச்சை தேவைப்பட்ட நோயாளி களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளித்தனர்.