tamilnadu

img

மலைபாதையை மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு மலை கிராமத்திற்கு கொடும்பாம்பள்ளி மலை அடிவாரம் முதல் சேர்க்கானூர் மலை கிராமம் வரை உள்ள சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து மலைபாதையை மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் சாலை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.