வானூர், திண்டிவனம் உட்பட 4 மையங்களில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
விழுப்புரம், அக்.13- விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் விழுப்புரம், வானூர், திண்டிவனம், கண்டாச்சிபுரம் ஆகிய நான்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (அக்.13) காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பி.அய்யனார் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ஜி.செயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர்கள் இ.முருகன், எஸ்.செல்வி, செயலாளர்கள் எம்.மும்மூர்த்தி, கே.மகுடமணி, எஸ்.பாண்டி யன் உட்பட ஏராளமானோர் கலந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. மாவட்டப் பொருளாளர் எம்.யுகந்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வட்டச் செயலாளர் ஏ.வேணுகோபால், பொருளாளர் வி.வரதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுகொடுத்தனர். அனைத்தையும் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதேபோன்று கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு எம். முருகன் தலைமையில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எம்.முத்துவேல் கலந்து கொண்டார். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்தி ருக்கும் போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பி.முருகன் கலந்து கொண்டார்.
