நூறுநாள் வேலைகோரி திருநாவலூரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
கள்ளக்குறிச்சி, ஆக. 7- மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் திரு நாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கண்டித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு 100 நாள் தொடர் வேலை வழங்கக் கோரியும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வியாழக் கிழமை (ஆக.7) தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கை ஏற்கும் வரை காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளி களுக்கு முழு ஊதியம் 336 ரூபாயை தடையில்லாமல் வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கான மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டத்தை அலுவலகத்தில் மாதத்தில் இரண்டாம் செவ்வாய்க்கிழமை துறை சார்ந்த அதிகாரிகளைக் கொண்டு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் உடனே நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளை அலை கழித்த அலுவலர்கள் வருத்தம் தெரி வித்துக் கொண்டனர். இதையடுத்து, போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த போராட்டம் சங்கத்திற்கு மாவட்டப் பொருளாளர் ஏ.முத்துவேல் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பி.வேலு, முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஜே.கண்ணன், ஏ.செந்தில்குமார், பி.சுரேஷ், ஜி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.