100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு
கடலூர், அக்.8- மாற்றுத்திறனாளிகளுக்கு100 நாள் வேலை கேட்டு கடலூர் வட்டார வளர்ச்சிஅலுவலரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்சார்பாக மாவட்ட செயலாளர் ஆர்.ஆளவந்தார் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டகடலூர் முதுநகர், சுத்துக்குளம், பீமாராவ் நகர், பச்சையாங்குப்பம், மனக்குப்பம், காரைக்காடு, சின்ன காரைக்காடு, பிள்ளையார் மேடு, செம்மங்குப்பம், பூண்டியாங்குப்பம், பில்லாலிதொட்டி, உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டம் மிகக் குறைந்த அளவை நடைபெறுகிறது. வருவாய் இன்றிவாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணிநேர வேலையும் முழு ஊதியம் ரூ.336 வழங்கிட வேண்டும் என்று அந்த மனுவில்கேட்டுக் கொண்டுள்ளனர். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வி.வசந்தி, மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பி.அப்துல்அமீது, எம். பார்த்திபன் என்.ஜெயபால், சுலோச்சனா உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
