தொழிற்பயிற்சி அலுவலர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் 23 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த கோரியும், சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் வேலூர் வடக்கு, காட்பாடி குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் டிடி.ஜோஷி, மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், மாவட்ட துணைத்தலைவர் பா.வேலு, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.