சேத்துப்பட்டில் ஆர்ப்பாட்டம்
சேத்துப்பட்டில் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை, பிப்.10- சேத்துப்பட்டு தாலுகா இடையங்குளத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் கிளைச்செயலாளர் எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பாரி, வட்டக்குழு செயலாளர் வி.எல்லப்பன், எஸ்.சரவணன் ஆகியோர் கலந்து பேசி னர். இடையங்குளத்தூர், ஊராட்சியில் குளத்துமேட்டு தெருவில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு கூலி வழங்க வேண்டும், இடையங்குளத்தூர் ஊராட்சியில் விஏஓ அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தினர்.