tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில்  தீண்டாமைச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் த.கன்னியப்பன்  தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் அ.து.கோதண்டன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராமசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால்,  செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.கங்காதரன், சி.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.