ஜனநாயக வாலிபர் சங்க குமராட்சி ஒன்றிய மாநாடு
சிதம்பரம், செப். 2- சிதம்பரம் அருகே குமராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. அருநாத் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் சதீஷ்குமார் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராம்குமார் வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி நிறைவு ரையாற்றினார். 9 பேர் கொண்ட ஒன்றியக் குழுவின் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ்.பிரபாகரன், செய லாளராக ஜெ.அருநாத், பொருளாளராக வசந்த் தேர்வு செய்யப்பட்டனர். குமராட்சி-புளியங்குடி சாலையில் கழிவறை வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும், அரசு மாண வர் விடுதி, அரசு அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்வுகான வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.