விழுப்புரம், ஜூலை 9- விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட சோழன்பூண்டி, சோழக னூர், திருவாமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு அரசாணை 52இன்படி நூறு நாள் வேலை வழங்க வேண்டும், சட்டப்படி யான கூலி ரூ. 229 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் கோலிய னூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கச் சென்றனர், அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அலு வலகப் பணியாக வெளியே சென்றிருந்தார். எனவே அங்கு பணியில் இருந்த உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதியிடம் மனுவை கொடுத்தனர். ஆனால் அவர் மனுவை பெற்றுக் கொள்ளாமல் உயர் அதிகாரி கள் வரும் வரை காத்திருங்கள் எனக் கூறினார். பின்னர் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் ஜோதி மனுவை பெற்றுக்கொண்டார்.