districts

img

நூறு நாள் வேலை வழங்க மறுக்கும் தோகைமலை ஒன்றிய நிர்வாகம் வி.ச., வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

கரூர், செப்.28 - மகாத்மா காந்தி நூறு  நாள் வேலை திட்டத்தில்  பயனாளிகள் அனைவருக் கும் தோகைமலை ஒன்றியத் தில் வேலை வழங்க வேண்டும். கணினியை காரணம் காட்டி பயனாளிகளுக்கு வேலை  வழங்க மறுக்கும் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட் டம் தோகைமலை ஒன்றியக்  குழு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தோகைமலை ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முன்னதாக, தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வல மாக துவங்கி தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு பேரணி முடிவ டைந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாயிகள் சங்க ஒன்றிய செய லாளர் எ.முனியப்பன், விதொச ஒன்றியச் செயலா ளர் ஆர்.சங்கப்பிள்ளை ஆகியோர் தலைமை வகித்த னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வி.சிதம்பரம் கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க  மாவட்டச்  செயலாளர் கே.சக்திவேல், விதொச மாவட்ட செயலா ளர் இரா.முத்துச்செல்வன், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் ஏ.பெருமாள் உட்பட 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.