கரூர், அக்.13- கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிறுத்தப் பட்ட நூறு நாள் வேலை வழங்கிட வேண்டும், கூலி உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழி லாளர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சி அமைப்பு களில் கடந்த பல மாதங்களாக நூறு நாள் வேலை திட்டம் என்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பல மனுக்கள் அனுப்பப்பட்டும், இது வரை நடவடிக்கை என்பது எடுக்க வில்லை. எனவே, கடவூர் ஊராட்சி ஒன்றி யத்தை முற்றுகையிட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி அமைப்புகளி லும் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளி லும் முறையான நூறு நாள் வேலை யை அனைத்து அட்டைதாரர்களுக் கும் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நூறு நாள் வேலை திட்டத்தில் அட்டைதாரர்களுக்கு முறையாக பணி வழங்கப்படு கிறதா என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்திட வேண்டும். காலை 7 மணிக்கு பணித்தளத்திற்கு வர வேண்டும் என்ற குற்றச்சாட்டு உள்ளது. காலை 9 மணிக்கு பணித் தளத்திற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.முத்து செல்வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, விவ சாய சங்க மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், ஒன்றியத் தலை வர் பி.வேல்முருகன், ஒன்றியச் செயலாளர் பி.பழனிவேல் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.