சென்னை:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளருமான கே.வெங்கடேசன் (வயது 65) மறைவிற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
ஒன்றுபட்ட வடஆற்காடு மாவட்டத்தில் விசாமங்கலம் கிராமத்தில், பிறந்த தோழர் கே.வெங்கடேசன் 1980-களில் திருவள்ளூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தொழிற்சங்கம் அமைத்ததற்காகப்பணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம் விசாமங்கலம் கிராமத்திற்குச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணியாற்றினார்.விவசாயிகள் சங்கத்தில் இணைந்துசேத்துப்பட்டு பகுதிகளிலும் விவசாயிகளை அணி திரட்டி விவசாயிகளின் உரிமைக்கான போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்செயலாளராக மாவட்டம் முழுவதும்தனது பணிகளை கம்பீரமாக தொடர்ந்தார். பின்பு அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர்களில் ஒருவராகவும், தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டபோது, அதன்மாநில பொருளாளராகவும் தற்போதுவரை செயல்பட்டு விவசாயக்கூலித் தொழிலாளர்களை அணிதிரட்டினார். திருவண்ணாமலை மற்றும் அருகாமை மாவட்டங்களில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களையும் திரட்டிஅவர்களுக்கான கோரிக்கைகளுக்காக ஆலைமட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சேத்துப்பட்டு தாலுகா செயலாளராகவும் மக்கள் பணியை தொடர்ந்தஅவர் வியாழனன்று நள்ளிரவில் காலமான செய்தி துயரத்தை அளிக்கிறது. மிகச்சிறந்தப் போராளியை செங்கொடி இயக்கம் இழந்துள்ளது.அவரது மறைவால் துயறுற்றிருக்கும்அவரது மனைவி மணிமேகலை, மகள் ஜான்சிராணி, மகன் லெனின் பாரதி மற்றும் தோழர்களுக்கும் விதொசமாநிலக்குழு சார்பில் அஞ்சலியையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கி
றோம்.