கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கோரிக்கை
சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம்பட்டு ஊராட்சி உள்ளது. மூவரசம்பட்டு பிரதான சாலை வழியாக திரிசூலம் கல் குவாரிகளுக்கு கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. பள்ளி நேரங்களில் கனரக வாகனம் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த, பள்ளி வேளை நேரங்களில்கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க கோரி புதனன்று (ஜூன் 25) மூவரசம்பட்டு பிரதான சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலந்தூர் பகுதிக்குழு உறுப்பினர் ந.வெங்கடேசன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தென்சென்னை மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.