வேலூர், ஜூலை 7- வேலூர் மாவட்டம் நெமிலி வட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணியூர் கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதி யில் பலஆண்டுளாக குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. பலகட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறி விக்கப்பட்டது. இதனைய டுத்து, வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி என அறிவித்ததால் போராட்ட த்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர். எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் துளசிராம் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்த காவல் துறையினர் ஆலோசனை வழங்கினர். இதை ஏற்று தலைவர்கள் பேச்சு வார்த்தைக்கு சென்றனர். இந்த பேச்சுவார்த்தை யில், பண்ணியூர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும், சுடுகாட்டு பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு எடுத்துச்சென்று, சுடுகாட்டு நிலத்திற்கு அருகில் உள்ள இடத்தை வாங்கி சுடு காடு விரிவாக்கம் செய்து தரப்படும் என உறுதிய ளித்தார். இதில் எம்.லட்சுமணன், ஆர்.ஜெகன், எஸ்.சரத்குமார், எம்.குமரேசன், எஸ்.விக்ரம், எம்.விக்கி, கே.சரண்ராஜ், விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.வெங்கடே சன், சிஐடியு கே.சிவக்குமார், விவசாயிகள் சங்க செய லாளர் ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ஏபிஎம் சீனிவாசன், அரக்கோணம் தாலுக்கா சிபிஎம் செய லாளர் துரைராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.