tamilnadu

img

தரமான அரிசி வழங்க உறுதி:  சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

தரமான அரிசி வழங்க உறுதி:  சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

கடலூர், அக்.5-  திருக்கண்டேஸ்வரம் ரேசன் கடையில் ஆறு மாதங்களாக தரமற்ற அரிசி வழங்கப்பட்டு வந்ததை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தது. இதனை அறிந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். சிபிஎம் கோரிக்கையை ஏற்று தரமான அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாகவும், அனைத்து வேலை நாட்களிலும் கடை திறந்திருக்கும் என்றும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஜெயபாண்டியன், பகுதிக் குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், நிர்வாகிகள் தர்மேந்திரன், ஆர்.வி.எஸ்.தண்டபாணி, கிளைச் செயலாளர் பி.ரவிச்சந்திரன், மூத்த தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.