மலட்டாற்று கரையை சீரமைக்க வேண்டும் ஆட்சியரிடம் சிபிஎம் மனு
கடலூர், அக்.15- மலட்டாற்று கரையை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் முக்கிய கிளை நதிகளில் ஒன்றான மலட்டாறு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூருக்கு அருகில் அரசூர் வழியாக கடலூர் மாவட்டத்திற்குள் நுழை கிறது. விழுப்புரம் மாவட்ட த்தின் தென்கிழக்கு பகுதி யில் இருந்து கடலூர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதிக்கு பாய்ந்து மேற்கு மற்றும் மத்திய பகுதி வழியாக கடலூர் வட்டம் தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம் வழி யாக குமாரமங்கலம் அணைக்கட்டிற்கு வந்து அடைகிறது. குமாரமங்கலம் கிளை வாய்க்கால் வழியாக அபிஷேகப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. அபிஷேகப்பாக்கம் ஏரி நிரம்பும்போது உபரி நீர் மீண்டும் மேல் அழிஞ்சிப் பட்டு, உடலப்பட்டு அருகில் மலட்டாற்றில் வெளி யேற்றப்படுகிறது. நாகப்பட்டினம் புறவழிச் சாலை மேம்பாலம் அமைக்கும்போது 20 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்ட தென்பகுதி கரை சுமார் 50 மீட்டருக்கு மேல் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த கரை யின் வழியாக வழிந்து ஓடிய வெள்ள நீர் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகளை மூழ்கடித்தது. இந்த ஆண்டு பருவ மழை தொடங்கப்பட உள்ள நிலையில் இதுவரை மலட்டாற்றின் சேதப்ப டுத்தப்பட்ட தென்பகுதி கரை சீரமைக்கப்படவில்லை. எனவே சாகுபடி பயிரையும் குடியிருப்பையும் பாது காக்க உடனடியாக இதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மனு அளிக்கும்போது கட்சி மாவட்ட செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றிய செய லாளர் பஞ்சாட்சரம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம்.கடவுள், மாவட்ட பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
