tamilnadu

img

காட்டுமன்னார்கோவிலில் சிபிஎம் மக்கள் சந்திப்பு நடைபயணம்

காட்டுமன்னார்கோவிலில்  சிபிஎம் மக்கள் சந்திப்பு நடைபயணம்

சிதம்பரம், ஜூன் 14- காட்டுமன்னார்கோவிலில் சிபிஎம் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் ,  தமிழக அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நடைபயணம் நடைபெற்றது. காட்டு மன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு  கட்சியின் காட்டுமன்னார்கோவில்  வட்ட செயலாளர் பி.தேன்மொழி தலைமை தாங்கினார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா கலந்து கொண்டு மோடி அரசின் மக்கள்  விரோத கொள்கைகளை கண்டித்து பேசினார்.  இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரச்சார இயக்க பேரணியை கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி செங்குந்தர் தெரு, செட்டி தெரு, கடைவீதி, இரட்டை தெரு,  ஓமம்புலியூர் ரோடு ஆகிய பகுதிகளுக்கு நடைபயணம் மேற்கொண்டு முழக்கங்கள் எழுப்பியவாறு துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர். காட்டுமன்னார் கோவில் கருவூலம் அருகே பேரணி நடைபயணம் முடிவடைந்தது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், எஸ். பிரகாஷ், மூத்த உறுப்பினர் மகாலிங்கம், வட்டக் குழு உறுப்பினர்கள் , பொன்னம் பலம்,  விமலக்கண்ணன், மணிகண்டன், ஜாகிர் உசேன், தனபால், ரேணுகா, நாகப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.