tamilnadu

img

இலங்கியனூர் ரயில் பாதையில் சுரங்கப்பாதை திட்டம் கைவிட வேண்டும் சிபிஎம் எம்.பி வலியுறுத்தல்

இலங்கியனூர் ரயில் பாதையில்  சுரங்கப்பாதை திட்டம் கைவிட வேண்டும்  சிபிஎம் எம்.பி வலியுறுத்தல்

கடலூர், ஜூலை 1- விருத்தாசலம் - சேலம் மார்க்கம்  கடலூர் மாவட்டம் இலங்கியனூர் ரயில் பாதை யில் சுரங்கப்பாதை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் தொகுதி மக்களவை சிபிஎம் உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், விருத்தாசலம் - சேலம் மார்க்கம் செல்லும் ரயில் பாதையின் இடையே கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இளங்கியனூர் ரயில்வே கேட் எண்.73ல் சுரங்கப்பாதை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது. விவசாய பணிகள் பாதிக்காத வகையில் சுரங்கப்பாதைக்கு மாற்றாக கேட் எண்.73இல் கேட் கீப்பர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர், உரிய முறை யில் விரைவாக விசாரணை செய்து சுரங்கப்பாதை அமைப்பதை நிறுத்திவிட்டு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வேப்பூர் வட்டக் குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் எஸ்.ராயர், ம.கனகராஜ், தாழநல்லூர் பி.கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.