மதுரவாயல் பகுதியில் டி.ஆர்.பாலுக்கு சிபிஎம் உற்சாக வரவேற்பு
திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வியாழனன்று (ஏப்.11) மதுரவாயல் பகுதியில் வாக்கு சேகரித்தார். சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ, சிபிஎம் தொகுதி பொறுப்பாளர் க.பீம்ராவ், பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவு திரட்டிய விசிக தலைவர் திருமாவளவன்
தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு வியாழனன்று (ஏப்.11) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா எம்எல்ஏ, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசினர்.
அண்ணாநகர் பகுதியில் வாக்கு சேகரித்தார் தயாநிதி மாறன்
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் புதனன்று (ஏப்.10) அண்ணாநகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். எம்.கே.மோகன் எம்எல்ஏ, பகுதிச் செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேப்பேரி பகுதியில் போக்குவரத்து மாற்றம்
சென்னை,ஏப்.11- சென்னை வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜெர்மியா சாலை சந்திப்பு வரையில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கழிவுநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் வருகிற 13 ஆம் தேதி வரை வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்