திருவண்ணாமலை மாநகரில் தடையில்லாமல் குடிநீர் வழங்க சிபிஎம் கோரிக்கை
திருவண்ணாமலை, செப். 9- திருவண்ணாமலை மாநகரத்தில் தடை யில்லாமல் குடிநீர் வழங்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவண்ணாமலை தபால் நிலையம் முன்பு இருசக்கர வாகனம் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், தியாகி அண்ணாமலை நகரில் வசிக்கும் மக்க ளுக்கு வீட்டுமனை வழங்கி கழிவுநீர் கால்வாய் தூர்வாரிட வேண்டும், பே. கோபுர தெருவில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும், தாமரை நகர் மற்றும் மாரியம்மன் கோவில் தெரு பகுதி களில் தடை இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும், திருவண்ணாமலை நகரம் முழுவதும் தாராளமாய் கிடைக்கும் கஞ்சா மற்றும் போதை பொருளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. தலைமை தபால் நிலையம், பே. கோபுர தெரு, தாமரை நகர், மாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. இதில் கே. பழனி, ஜி. குண சேகரன், எம். தங்கராஜ், என். சகிலா ஆகி யோர் தலைமை தாங்கினர். மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாநகர செயலாளர் எம். பிரகலாதன், தமிழ்ச்செல்வி, செல்வி, இலியாஸ் சர்க்கார், வெங்கடேசன், கல்யாண சுந்தரம், யுவராஜ், கவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.