tamilnadu

img

சிபிஐ மாநிலச் செயலாளராக தேர்வு பெற்ற மு.வீரபாண்டியனுக்கு சிபிஎம் வாழ்த்து!

சிபிஐ மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராகவும்தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினுடைய மாநில பொதுச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றி வருபவர் மு.வீரபாண்டியன்.  40 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் மக்களுக்காகப் போராடி வருபவர். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.