அம்மையார்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலையை அகலப்படுத்துக சிபிஎம், கிராம பசுமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், அக்.3- அம்மையார் குப்பம் பஜாரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து ள்ளவர்களை அகற்றி, அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம பசுமை இயக்கம் சார்பில் வியாழனன்று (அக் 3), ஆர்.கே.பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையை அடுத்த அம்மையார் குப்பம் பஜாரில் 15 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்மையார் குப்பத்திலிருந்து ஆந்திர மாநிலம் ஆவலகொண்டா வரை இச்சாலை செல்கிறது. இந்த பஜார் சாலை 10 மீட்டர் அகலத்திற்கு நெடுஞ்சாலை துறையினர் வசமிருந்துள்ளது. இதில் போக்குவரத்து தாரளமாக சென்று வந்தது. தற்போது அம்மையார் குப்பம் பஜார் சாலை 6 அடி அகலத்திற்கும் குறைந்து மிகவும் சுருங்கி விட்டது. பிரதான சாலையில் இரண்டு பக்கமும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 10 அடி அகல நிலத்தை வசதி படைத்தவர்கள் ஆக்கிர மித்து வீடுகள் கட்டியுள்ள னர். அந்த இடத்திற்கு பட்டாவும் பெற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த வழித்தடத்தில் அரசு பேருந்துகள் தடம் எண்கள் 47, 48, 52, 97, 97G மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஜெசிபி, ஆட்டோக்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் செல்கின்றன. சாலை மிக வும் குறுகலாக உள்ளதால் மாணவர்கள் சைக்கிளில் கூட செல்லமுடியாத அள விற்கு தினந்தோறும் நெரிசல் ஏற்படுகிறது. அவசர மருத்துவ உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசலால் மக்கள் திணறுகின்றனர். பட்டாவை ரத்து செய்க நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வசதி படைத்தவர்கள் பட்டா பெற்றுள்ளனர். படடாவை வருவாய்த் துறை யினர் ரத்து செய்து, அரசு ஆவணங்களில் உள்ள அள வீடுகள் அடிப்படையில் சாலையை அலகப்படுத்தி சீரமைக்க வேண்டும். சிறிய குளம் ஆக்கிரமிப்பு அம்மையார் குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து, ஆந்திர மாநில பேருந்து நிலையம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதால் விசைத்தறி நெசவாளர்கள் தங்களின் பாவுகளை கூட எடுத்துச் செல்ல முடிய வில்லை என்கிறார்கள்.பேருந்து நிலையத்தில் உள்ள சிறிய குளம் ஆக்கிரமிக்கப்பட்டதையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம பசுமை இயக்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு கட்சியின் ஆர்.கே.பேட்டை வட்டச் செயலாளர் ஏ.சிவபிர சாத் தலைமை தாங்கி னார். கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயி னார், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொரு ளாளர் சி.பெருமாள், கிளை செயலாளர் என்.ஜி.வேலு, மூத்த தோழர் வெங்க டேசன், திருவள்ளூர் மாவட்ட விசைத்தறி நெச வாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.கே.பிருந்தாவனம், பசுமை இயக்க நிர்வாகிகள் ஏ.ஏ.மணிமாறன், எம்.டி.ரவிக்குமார் ஆகி யோர் பேசினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் பா.சரஸ்வதி யிடம் வழங்கினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
                                    