மணலி விரைவு சாலையில் விபத்துகளை தடுக்கக்கோரி சிபிஎம், பொதுமக்கள் போராட்டம்
சென்னை, ஜூலை 31- மணலி விரைவு சாலையில் நடை பெறும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர் வடக்கு பகுதிக்குழு மற்றும் அனைத்து நகர் நலச் சங்கங்கள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மாமன்ற உறுப்பி னர் ஆர்.ஜெயராமன் தலைமையில் வியாழனன்று (ஜூலை 31) நடை பெற்றது. இதில் சிபிஎம் வடசென்னை மாவட்டச்செயலாளர் எம்.ராம கிருண்ணன், குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், சிபிஎம் வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், தெற்கு பகுதிச் செயலாளர் ஆர்.கருணாநிதி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, காமராஜ் நகர் தலைவர் பட்நாயக், பிருந்தாவன் நகர் தலைவர் ஆறு முகம், கிரிஜா நகர் தலைவர் சுப்பிர மணியம், முல்லை நகர் நிர்வாகி பொன்னம்பலம், வி.பி.நகர் தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட பல நகர் நலச் சங்க நிர்வாகிகளும் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். பேச்சுவார்த்தை இதற்கிடையே தேசிய நெடுஞ் சாலை துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, எர்ணாவூரில் இருந்து முல்லை நகர் வரை உள்ள மண் சாலை ஒரு வாரத்திற்குள் தார் சாலை அமைக் கப்படும் என்றும், தேசிய நெடுஞ் சாலைத் துறையும், போக்குவரத்து காவல் துறையும் இணைந்து, ஆய்வு ரவுண்டானா அமைத்து, சிக்னல் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள் ளனர். சர்வீஸ் சாலை அமைக்க ஒன்றிய அரசுக்கு முன்மொழிவு அனுப்பியுள் ளோம். இந்த போராட்டம் அந்த முன்மொழிவுக்கு அழுத்தம் கொடுக்கும். நாங்களும் அழுத்தம் கொடுத்து விரைவில் சர்வீஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக வும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக காலவரை யற்ற உண்ணாநிலைப் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்று நிர்வாகி கள் எச்சரித்தனர். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், மக்களின் பாது காப்பை உறுத்திப்படுத்தும் வகை யில் நாட்டின் வளர்ச்சி இருக்க வேண்டும். மணலி விரைவு சாலை யின் நடுவே தடுப்பு சுவர் அமைக்கப் பட்டுள்ளது. அதை வரவேற்கிறோம். ஆனால் அந்த பக்கம் உள்ள மக்கள் இந்த பக்கம் சாலையை கடந்து வர வழிவகை செய்ய வேண்டும் இல்லையா? மக்கள் சாலையை கடக்க வழிவகை செய்து கொடுப்பதில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு என்ன பிரச்சனை. இங்கு சுமார் 5 கி.மீ. தூரம் வரை சாலையை கடக்க எந்த வசதியும் இல்லை. சிக்னல் விளக்குகள் இல்லை அதேபோல் சாலையின் இரண்டு புறமும் கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. தேசிய நெடுஞ் சாலைகளில் கண்டெய்னர் லாரிகள் நிறுத்துவதற்கு என்று தனி இடங்கள் உள்ளன. அங்கு வாகனங்களை நிறுத்தாமல் மக்கள் வசிக்கும் குடி யிருப்பு பகுதிகளில் நிறுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பி னார். இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன. திட்டங்களை உருவாக்கும் போது, அதை முழுமை யாக சிந்தித்து செயல்படுத்தும் நிர்வா கங்களாக அரசு நிர்வாகங்கள் இல்லை. எனவே பேருந்து நிறுத்தங் கள் உள்ள இடங்களில் தடுப்பு சுவரை அகற்றி, ரவுண்டானா அமைத்து சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும். அதேபோல் கண்டெய் னர் லாரிகள் செல்வதற்கு மேல்மட்ட சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் இதுகுறித்து ஆர்.ஜெயராமன் கூறுகையில், மணலி விரைவு சாலை யில் புறவழிச் (சர்வீஸ் ரோடு) சாலை அமைக்க வேண்டும், ரவுண்டானா அமைத்து சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நகர் நலச் சங்கங்களும் இணைந்து பல்வேறு போராட் டங்களை முன்னெடுத்துள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கும், போக்குவரத்து காவல் துறைக்கும் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்றார். அதிக சாலைவிபத்து சடையங்குப்பம் மேம்பாலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் இடது பக்கம் திரும்பி, எதிர் திசைக்கு செல்லும் போது விபத்துகள் நடை பெறுகின்றன. எனவே ஜோதி நகர் 3ஆவது தெருவில் இருந்து சடை யங்குப்பம் செல்லக்கூடிய அந்த இணைப்பில் ரவுண்டானா அமைத்து சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும்.தமிழகத்திலேயே அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக மணலி விரைவு சாலை உள்ளது என்று காவல் துறையால் அறிவிக் கப்பட்டுள்ளது. மணலி விரைவு சாலையில் புற வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று மாமன்றக் கூட்டத்தில் பேசி யுள்ளேன். மேயருக்கு, முதலமைச் சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஜோதி நகர் பகுதி சபைக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றி அளிக் கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் போக்குவரத்து காவல் துறை அதி காரிகள் கலந்து கொண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரி வித்தார்கள். 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.