tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கள்ளச்சாராய பலி  63 ஆனது

கள்ளக்குறிச்சி,ஜூன் 26 கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயி ரிழந்தவர்களின் எண்ணிக் கை 63 ஆக அதிகரித்துள்ளது. 

புதன்கிழமை காலை கரு ணாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் சேலம் அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த ராமநாதன் (62), ஏசுதாஸ் (35) ஆகிய இரு வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி 62 ஆக அதிகரித்தது. புதன் கிழமை மாலை சேலத்தில்  மேலும் ஒருவர் உயிரிழந் தார். இதையடுத்து உயிரி ழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்தது. 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம், சேல மருத்துவமனைகளில் இருந்து மொத்தமாக 74 பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பி யுள்ளனர். தற்போதைய நில வரப்படி கள்ளக்குறிச்சியில் 47, சேலத்தில் 29, விழுப் புரத்தில் 2, புதுச்சேரி ஜிப்மரில் 9, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 88 பேர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூட்டத்தொடர் முழுவதும்  அதிமுக எம்எல்ஏக்கள்  இடைநீக்கம் 

சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டமன்றம் புதன்கிழமை காலை 9:30 மணிக்கு கூடியது. பேரவை தலை வர் திருக்குறளை வாசித்து முடித்து கேள்வி நேரத்தை துவக்கியதும் எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் நான்காவது நாளாக கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி கூச்சல் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து தர்ணாவிலும் ஈடுபட்ட னர். சபாநாயகர் பலமுறை எச்சரித்தும், அவர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இதையடுத்து சபைக் காவலர்கள் மூலம் அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “பேரவை நட வடிக்கைகளை தடுத்து நிறுத்தும் அதிமுக உறுப்பினர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. இதனை யடுத்து, அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து  பேரவைத் தலைவர் அப்பாவு உத்தர  விட்டார்.

மேலும் சட்டமன்ற விதிகள் படி, ஒரு உறுப்பினர் மூன்று முறை பேரவையி லிருந்து வெளியேற்றப்பட்டால் அந்த கூட்டத் தொடர் முழுவதும் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்பதும்குறிப்பிடத்தக்கது. 
 

;