இருமல் மருந்து விவகாரம்: ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தோல்வி!
கோவை, அக்.12- இருமல் மருந்து விவகாரத்திற்கு, ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறு வனத்தின் தோல்வியே காரணம் என இந்திய மருத்துவ சங்க தலைவர் குற் றச்சாட்டினார். இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மாநிலத் தலைவர் செங்கோட்டையன், கோவையில் உள்ள ஐஎம்ஏ கட்டிடத்தில் சனியன்று செய்தியாளர்களை சந் தித்து, மத்திய பிரதேசத்தில் குழந்தை களுக்கு இருமல் மருந்து பரிந்துரைத்த விவகாரத்தில் எழுந்த பிரச்சனைகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர், கடந்த வாரம் மத்திய பிரதேசத் தில் இருமல் மருந்து பயன்படுத்திய தால் 6 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதற்கு டைஎத்திலின் கிளைக்கால் (Diethylene Glycol) என்ற நச்சு மருந்து, இருமல் மருந்தில் அதிகளவு கலந்தி ருப்பதே காரணம். இந்த மருந்து ஒன்றிய அரசின் ஆய்வில் முதலில் பாதுகாப்பா னது என அறிவிக்கப்பட்ட போதிலும், தமிழக அதிகாரிகளின் சோதனையில் 46% டைஎத்திலின் கிளைக்கால் இருப் பது கண்டறியப்பட்டுள்ளது. டைஎத்தி லின் கிளைக்கால், நரம்பு மண்டலம், நுரையீரல், இருதயம், சிறுநீரகம் ஆகிய வற்றை விரைவாக பாதிக்கும் அபாயகர மான மருந்து, இது பொதுவாக மருத்து வத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. குஜராத்தைச் சேர்ந்த ஒரு நிறுவ னத்தின் மருந்தில் 6% டைஎத்திலின் கிளைக்கால் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இந்த மருந்து கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய்க்கு விற்கப்படுகி றது. இது மருத்துவத்திற்கு பயன்படுத் தப்படாமல், பெயிண்ட், அழகு சாதனப் பொருட்கள், ஐஸ் கட்டி தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்படுகி றது. மருந்தக உரிமையாளர்கள் வாங் கும் பொருட்களை உரிய முறையில் ஆய்வு செய்தால் இதுபோன்ற பிரச் சனைகள் தவிர்க்கப்படும். குழந்தை கள் இருமலுக்கு தேன் கொடுத் தாலே போதுமானது, டானிக் தேவை யில்லை. இந்த விவகாரம் ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத் தின் தோல்வியாகவும் கருதப்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இந்திய மருத் துவ சங்க செயலாளர் கார்த்திக் பிரபு, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு டானிக் கொடுக்க வேண்டும் என மருத் துவர்களை நிர்பந்திக்கக்கூடாது. இந்த சம்பவத்தில் மருத்துவர்கள் கைது செய் யப்பட்டது கண்டிக்கத்தக்கது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களே தரத்திற்கு பொறுப்பு. மருத்துவர்கள் மருந்து தயா ரிப்பிலோ, விலை நிர்ணயத்திலோ பங்கு வகிப்பதில்லை. தடை செய்யப் பட்ட மருந்து பரிந்துரைகப்பட்டிருந் தால் மட்டுமே மருத்துவர்கள் மீது நட வடிக்கை எடுக்க முடியும், என்றார்.
