சென்னை
இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 89,561 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து திருவள்ளூரில் 430 பேரும், ராணிப்பேட்டையில் 414 பேரும், விருதுநகரில் 363 பேரும், தூத்துக்குடியில் 327 பேரும், காஞ்சிபுரத்தில் 325 பேரும், செங்கல்பட்டில் 223 பேரும், திருச்சியில் 213, திருவண்ணாமலையில் 210 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் 2-வது பெரிய நகரான மதுரையில் 197 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்கள்:
கோவை - 176
தேனி - 165
கன்னியாகுமரி - 152
வேலூர் - 137
திருநெல்வேலி - 120
தஞ்சாவூர் - 106
விழுப்புரம் - 105
மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது.கரூர், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.