tamilnadu

img

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றி அமைப்பு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னை கோவை உள்ளிட்ட இடங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 3வது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெருவதற்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
அதன் அடிப்படையில் தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 5000 என்று நிர்ணயம் செய்துள்ளது.  ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ. 15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக ரூ. 7,500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  மேலும் வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 30,000 மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 25,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டர் தேவையில்லையெனில் தொகுப்பு கட்டணம் ரூ. 27,100 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

;