பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துக: ஆட்டோ சங்கம்
சென்னை, ஜூலை 28- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என ஆட்டோ சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் திருவொற்றியூர் பகுதி 19ஆம் ஆண்டு பேரவை விம்கோ நகரில் தோழர் வி.பி.சிந்தன் நினைவரங்கில் ஞாயிறன்று (ஜூலை 27) நடைபெற்றது. தலைவர் எம்.வெங்கடேசன் தலைமை தாங்கி னார். துணைத்தலைவர் டி.சங்கர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பொறுப்பாளர் எஸ்.குமாரன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் எஸ்.காதர் உசேன் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே.செல்வராஜ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.ஜெயகோபால் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைச் செயலாளர் ஆர்.சந்திரன் வரவேற்றார். துணைத்தலைவர் ஏ.கேசவன் நன்றி கூறினார். தீர்மானங்கள் தேச விரோத, மக்கள் விரோத தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மாதா மாதம் மின் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக ஆர்.சந்திரன், செயலாளராக எஸ்.காதர் உசேன், பொருளாளராக எம்.வெங்கடேசன் உள்ளிட்டு 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துக! மாற்றுத்திறனாளிகள் மாநாடு கோரிக்கை சென்னை, ஜூலை 28 - தாம்பரம் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தள நடைமேடை, பேட்டரி கார்,லிப்ட் வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தாம்பரம் பகுதி 3வது மாநாடு ஞாயிறனறு (ஜூலை 27) நடைபெற்றது. மாநாட்டில், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்த வேண்டும், விண்ணப்பித்த காத்திருப்போருக்கு உதவித்தொகைகளை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு பகுதி தலைவர் ஜெ.மைதிலி தலைமை தாங்கினார். சங்க கொடியை துணைச் செயலாளர் பி.அந்தோணி சேவியர் ஏற்றினார். முத்துலட்சுமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார் மாநாட்டை தொடங்கி வைத்தார். வேலை அறிக்கையை செயலாளர் அ.கிருஷ்ணனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் எம்.தீனதயாளனும் சமர்ப்பித்தனர். மாவட்ட நிர்வாகிகள் என்.சாந்தி, எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டு தோழமைச் சங்கத் தலைவர்கள் வாழ்த்தி பேசினர். மாநிலச் செயலாளர் எஸ்.பகத்சிங் நிறைவுரையாற்றினார். கஸ்தூரிபாய் நன்றி கூறினார். 19 பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலைவராக ஜெ.மைதிலியும், செயலாளராக அ.கிருஷ்ணனும், பொரு ளாளராக எம்.தீனதயாளனும் தேர்வு செய்யப்பட்டனர். கட்டுமான தொழிலாளர் சங்க மதுரவாயல் (கி) பகுதி பேரவை சென்னை, ஜூலை 28 - சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மதுரவாயல் கிழக்கு பகுதி 15வது ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஜூலை 27) காரம்பாக்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பகுதித் தலைவர் எம்.முருகேசன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ஜி.ஜெகந்நாதன் வரவேற்க, துணைத் தலைவர் சி.வி.தாமோதரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தென்சென்னை மாவட்டத் தலைவர் ஈ.மூர்த்தி தொடக்க உரையாற்றினார். பகுதிச் செயலாளர் ஜெ.பழனி வேலை அறிக்கையையும், பொருளாளர் கி.பொன்னன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். முறைசாரா தொழிலாளர் சங்க நிர்வாகி வி.தாமஸ் வாழ்த்தி பேசினார். சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். குமரவேல் நன்றி கூறினார். 23பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலைவராக எம்.முருகேசன், செயலாளராக ஜெ.பழனி, பொருளாளராக கி.பொன்னன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஸ்மார்ட்போன் சென்னை, ஜூலை 28- இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் டிஜிட்டல், விவோவின் புதிய வரவான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமைமிக்க Vivo X200 FE ஸ்மார்ட்போனை சென்னையில் அறிமுகம் செய்தது. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமைமிக்க ஸ்மார்ட்போனை விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய செல்போன் அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், துல்லியமாக புகைப்படங்களை எடுத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்று விவோ நிறுவன நிர்வாகி ஒருவர் கூறினார்.