tamilnadu

img

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 29-  ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கான திருவொற்றியூர் - எண்ணூர்- மணலி பொது தொழிலாளர் சங்கத்தின் மாநாடு ஞாயிறன்று (ஜூலை28) விம்கோ அருகே உள்ள வி.பி.சி இல்லத்தில் நடைபெற்றது. சிஐடியு வடசென்னை மாவட்டப் பொருளாளர் வி.குப்புசாமி துவக்கிவை த்தார். இந்த மாநாட்டில் பேசிய எம்.ஆர்.எப் தொழி லாளர் சங்கத்தின் செயலா ளர் சி.ஆர் பிரபாகரன், என்பீல்டு தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் குமாரசாமி, சி.பி.சி.எல் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வைத்தியலிங்கம், டி.பி.எல் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சத்தியநாதன், மணலி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு இணைச் செயலாளர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் நிரந்தர தொழிற்சங்கங்களும் ஈடுபடும் என உறுதி அளித்த னர். தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.ஜி. காசிநாதன் நிறைவுரை யாற்றினார். இந்த மாநாட்டில், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
நிர்வாகிகள்
சங்கத்தின் தலைவராக ஆர்.ஜெயராமன், செய லாளராக கே.ஆர். முத்து சாமி, பொருளாளராக முரளி ஆகியோர் தேர்ந்தெடுக்க ப்பட்டனர்.

;