tamilnadu

img

செங்கொடி சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம்

செங்கொடி சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் 

சென்னை மாநகராட்சியில் 4 மற்றும் 8வது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 31) 8வது மண்டல அலுவலகம் முன்பு (செனாய் நகர்) சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி தலைமை தாங்கினார். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு, துணைப்பொதுச் செயலாளர்கள் டி.ராஜன், ஜி.முனுசாமி, துணைத் தலைவர்கள் பி.சுந்தரம், கே.தேவராஜ், 8வது மண்டல தலைவர் சி.முருகன் ஆகியோர் பேசினர்.