பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமிக்காவிட்டால் தொடர் போராட்டம்!
சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் அறிவிப்பு
சென்னை, ஆக. 19- திருவொற்றியூர் 4ஆவது வார்டில் உள்ள பள்ளிகளில் தூய்மை பணி யாளர்களை நியமிக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மண்டலக்குழு கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர் ஆர்.ஜெயராமன் தெரி வித்தார். சென்னை மாநகராட்சி திரு வொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் திங்களன்று (ஆக. 18) மண்டலத் தலைவர் தி.மு.தனியரசு தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசுகையில், நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என மூன்று மாநகராட்சி பள்ளி கள் உள்ளன. இந்த பள்ளிகளில் அடித்தட்டு விளிம்பு நிலை மாண வர்கள் படிக்கின்றனர். ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளியில் சுமார் 600 மாண வர்கள் படிக்கிறார்கள். சமீபத்தில் புதிதாக 9 வகுப்பறைகள் கட்டப் பட்டுள்ளது. ஏற்கெனவே 9 வகுப்பறைகள் உள்ளன. தலைமை ஆசிரியர் அறை, நூல் நிலையம் என 20 அறைகள் உள்ளன. இவை களைப் பெருக்க ஒரே ஒரு தூய்மை பணியாளரும், 7 கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஒரே ஒரு தூய்மை பணியாளரும் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவருக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. ராமநாதபுரம் பள்ளியில் தூய்மை பணியாற்ற நியமிக்கப் பட்ட 2 பேர் மண்டல அலுவ லகத்தில் உதவியாளர்களாக செயல்படுகிறார்கள். அவர்கள் பட்டதாரிகள் என்பதால் தூய்மை பணி செய்ய மாட்டார்களாம். அப்படியானால் பள்ளியில் யார் தூய்மை பணி செய்வார்கள் என கேள்வி எழுப்பினார் எர்ணாவூர் துவக்கப்பள்ளியில் ஒரே ஒரு தூய்மை பணியாளர் மட்டுமே உள்ளார். அவரே 10 வகுப்பறைகளையும் பெருக்க வேண்டும். இரண்டு கழிப்பறை களையும் சுத்தம் செய்ய வேண்டும். எர்ணாவூர் உயர்நிலைப் பள்ளியில் ஒரே ஒரு தூய்மை பணியாளர். கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஊழியர் இல்லை. அலுவலக உதவியாளர் இல்லை. அடிப்படைத் தேவைக்கு ஊழியர்கள் இல்லாததால் பள்ளியை தூய்மையாக வைத்திருக்க முடியாத நிலை உள்ளது. அதற்கு பதில் அளித்து மண்டல அலுவலர் பாண்டியன் பேசுகையில், ஏற்கெனவே 200 மாணவர்களுக்கு ஒரு தூய்மை பணியாளர் என்று இருந்தது. தற்போது 300 மாணவர்களுக்கு ஒரு தூய்மை பணியாளர் என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருவொற்றியூர் மண்டலத்தில் 93 ஊழியர்கள் பள்ளிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தற்போது ஆணையர் உத்தரவால் 72 தூய்மை பணியாளர்கள் மட்டுமே தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய சில தூய்மை பணியாளர்கள் மண்டல அலுவலகத்தில் பணியாற்றுவது உண்மைதான் என்றார். உடனே ஜெயராமன் குறுக்கிட்டு, கடந்த மாமன்ற கூட்டத்தில் 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா 200 மாணவர்களுக்கு ஒரு ஊழியர் என்பதை 300 மாணவர்களுக்கு ஒரு ஊழியராக ஏன் மாற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மேயர் 200 மாணவர்களுக்கு இல்லை, 150 மாணவர்களுக்கு ஒரு ஊழியர் என தீர்மானித்துள்ளோம் என்று கூறினார். ஆணையரும் அதை ஆமோதித்தார். அப்படி இருக்கையில் மீண்டும் 300 பேருக்கு ஒரு ஊழியர் என ஆணையர் எப்படி உத்தரவு போட முடியும். மாமன்றம் அதிகாரம் படைத்ததா? ஆணையர் அதிகாரம் படைத்தவரா? என கேள்வி எழுப்பினார். தலைவர் தனியரசு பேசுகையில், உடனே தூய்மை பணியாளர்களை பள்ளிகளுக்கு நியமிக்க வேண்டும். கடந்த மாமன்ற கூட்டத்தில் மேயர் பேசியது உண்மைதான். ஆணையரும் ஏற்றுக்கொண்டார். எனவே பள்ளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய ஜெயராமன், பேக்கேஜ் முறை இருப்பதால் சாலைகள் அமைக்க ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் பணியை செய்வதில்லை. குறிப்பாக முகிலன் என்ற ஒப்பந்ததாரர் ஒப்பந்தம் எடுத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. சாலையில் மில்லிங் செய்து 20 நாட்களாகிறது. அவரை தொடர்பு கொண்டால் நந்தனத்தில் பணியாற்றுவதாக கூறுகிறார். பேக்கேஜ் முறையால் வேலைகள் நடக்கவில்லை என்றும், ஜெய்ஹிந்த் நகர் ராமநாதபுரத்தில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனே மாற்ற வேண்டும். வி.பி. நகர், ஜோதி நகர் விரிவாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இப்படி வார்டு முழுவதும் பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ளது என்று குற்றச்சாட்டினார்.