tamilnadu

தங்கம் வென்ற கோமதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஏப்.23-கத்தார் நாட்டின் தலை நகர் தோஹாவில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளில் திருச்சி மாவட் டம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்த கோமதி, மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.வைகோ பாராட்டு2013 முதல் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்ற கோமதி, தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளரவில்லை. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார். அவரது தந்தை மாரிமுத்து, 2016 ஆம் ஆண்டு, புற்றுநோயால் இயற்கை எய்தினார். அடுத்த சில மாதங்களில், பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் காலமானார். அடுக்கடுக்கான துன்பங் களைக் கண்டு நான் மனம் தளர்ந்து விடவில்லை. சோதனைகள் அனைத்தையும், நெஞ்சுரத்தால் எதிர்கொண்ட சாதனை படைத்திருக்கும் கோமதியின் வாழ்க்கையும் சாதனையும், தமிழக மகளிருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கின் றது. அவருக்கு, தமிழக அரசு உரிய மதிப்பு அளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருக்கிறார்.

;