tamilnadu

img

ரூ.30 கோடி செலவில் மதுராந்தகம் ஏரியைத் தூர்வார கருத்துரு

செங்கல்பட்டு, ஜூன் 17-  மதுராந்தகம் ஏரியைத் தூர் வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவிற்கு ரூபாய் 33 கோடி கேட்டு தமிழக அரசிற்கு கருத்துரு அனுப்பியிருப்பதாக மாவட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட, மதுராந்தகம்  ஏரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய  ஐந்து ஏரிகளில் ஒன்று. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 5 மதகுகளும், 6 கலிங்கல்களும் உடையது. இந்த ஏரியின் மூலம் 1154.88 ஹெக்டேர்  நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றது.  ஏரியின் முழு கொள்ளளவு 694 மில்லியன் கன  அடியாகவும், 976 ஹெக்டேர் நீர்பிடிப்பு பரப்பளவும் கொண்டது.  இந்த ஏரி விவசாயம் மட்டுமன்றி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் குடிநீருக்கு ஆதாரமாகவும் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிர் தூர் வாரப்படாததால் ஏரியில் வண்டல் மண் படிந்து நீர்பிடிப்பு கொள்ளளவு வெகுவாக குறைந்து ள்ளது. இந்நிலையில் மதுராந்தகம் ஏரியைத் தூர்வாரி, கரையைப் பலப்படுத்தி சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடுமையான வறட்சி யால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மதுராந்த கம் ஏரியை தூர்வாரி பாராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் கே.நேரு, கடந்த ஜனவரி மாதம் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியரிடம்  மனு கொடுத்தார். இந்த மனுவிற்கு,  மாவட்ட பொதுப்பணித்துறையின் சார்பில் கீழ் பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கொடுத்துள்ள விளக்கத்தில், ‘மதுராந்தகம் ஏரியைத் தூர்வாருவதற்காக ரூ.33 கோடி  கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு ள்ளது. அரசிடம் இருந்து  உரிய ஒப்புதல்  மற்றும் நிதி கிடைக்கப் பெற்றவுடன், ஏரியைத்  தூர்வாரும் பணி மேற்கொள்ள  நடவடிக்கை  எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டு ள்ளது. இதுகுறித்து கே.நேரு கூறுகையில்,  மதுராந்தகம் ஏரி மட்டு மில்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரி பரா மரிக்க வேண்டும். மதுராந்தகம் ஏரியைத் தூர்வார வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு விற்கு ரூ. 33 கோடி கேட்டு கருத்துரு அனுப்பியிருப்பதாகப் பதில் கொடுத்துள்ளனர். தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறி வித்துள்ளது. இந்நிலையில் உடனடி யாக மதுராந்தகம் ஏரியை தூர்வாரத் தேவையான நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.