சென்னை, ஆக. 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதி முன்னணி ஊழியர் தோழர் வி .இளங்கோவன் புதனன்று (ஆக.19) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. 1989ல் கட்சியில் இணைந்த தோழர் இளங்கோவன், வடசென்னை பகுதி ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம் ஆகிய பகுதிகளில் பணியாற்றினார். இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், ஆட்டோ தொழி லாளர் சங்கம் ஆகியவற்றில் பொறுப்பு களில் இருந்து பணியாற்றினார். அவ ருக்கு மீனாட்சி என்ற மனைவியும், அஜய் என்ற மகனும் உள்ளனர். கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், ஆர். ஜெயராமன், லோக நாதன், ராயபுரம் பகுதிச் செயலாளர் செல்வானந்தம், தமு எகச மாவட்டச் செயலாளர் ராஜேந்திர குமார், ஆட்டோ சங்கத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் முத்தமிழ் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.