tamilnadu

img

தோழர் அனந்தநம்பியார் சுடர் பயணம் துவக்கம்

தோழர் அனந்தநம்பியார் சுடர் பயணம் துவக்கம்

ஈரோடு, அக்.7- டிஆர்இயுவின் 35 ஆவது மாநாட்டிற்கான தோழர் கே.அனந்தன் நம்பியார் நினைவு சுடர் பயணம் ஈரோட்டிலிருந்து செவ்வாயன்று தொடங்கியது. சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட தட்சிண ரயில்வே  எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) 35 ஆவது மண்டல  மாநாடு அக்.8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் நடை பெறுகிறது. இந்நிலையில், ரயில்வேயில் முதல்  சம்பள கமிசன் அமைக்கவும், பர்சனல் பிரான்ச் துறை  உருவாகவும், தொழிலாளர்களை விசாரணையின்றி  வேலை நீக்கம் செய்யும் சட்டத்தை டிஏ விதியை  முறியத்து டிஏஆர் விதி உருவாகவும், போனஸ் உள் ளிட்ட பல்வேறு உரிமைகளையும், சலுகைகளையும் போராடி பெற்றுத்தந்த ஒப்பற்ற தலைவர் தோழர்  கே.அனந்த நம்பியார். திருச்சி தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், டிஆர்இயு- வின் முன்னாள் பொதுச்செயலாளராகவும் இருந்த  தோழர் அனந்தநம்பியாரின் நினைவு சுடர் பயணம்  செவ்வாயன்று ஈரோட்டிலிருந்து புறப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு கோட்டத் தலைவர் சி.முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்றோர் அமைப்பின் கோட்டத் தலைவர் சி.முருகேசன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் மற்றும் ஓட்டுநர்கள் சங்க  கோட்டச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் நினைவு சுடரை  உதவி கோட்டச் செயலாளர் கே.பிஜு-விடம் வழங்க பய ணம் தொடங்கியது.