tamilnadu

வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு

சென்னை, மார்ச் 28 - 18-ஆவது மக்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் புதனன்று நிறைவடைந்த நிலையில், மொத்தம் 1749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றின் மீதான பரிசீலனை வியாழனன்று (மார்ச் 28) காலை துவங்கி, பிற்பகல் 3 வரை நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர்கள் ஆ. ராசா (நீலகிரி), கலாநிதி வீராசாமி (வடசென்னை) உள்ளிட்டோரின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம் செல்வ கணபதியின் மனுவை நிராகரித்த அதிகாரிகள், மாற்று வேட்பாளரின் மனுவை ஏற்றதால் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர், டி.எம் செல்வகணபதியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. 

டி.ஆர். பாலு, கனிமொழி, தொல். திருமாவளவன், துரை வைகோ, சிபிஎம் வேட்பாளர்கள் சு. வெங்கடேசன், ஆர். சச்சிதானந்தம், காங்கிரஸ் வேட்பாளர்கள் சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. கோயம்புத்தூரில் அண்ணாமலையின் மனுவில் குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தும், அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அதிமுக கூறியுள்ளது.

;