tamilnadu

img

தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்... சிபிஐ வலியுறுத்தல்

சென்னை:
தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்காக 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மாதம் ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியம் பெற்று வந்த இவர்கள் தற்போது 7 ஆயிரத்து 700 மட்டுமே ஊதியமாக பெற்று வருகின்றனர்.தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு இனி வரும் நாட்களில் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என 2011ஆம்
ஆண்டு முதலமைச்சர் ெஜ.ெஜயலலிதா சட்டப் பேரவையில்உறுதி அளித்தார். அது இதுவரை நிறைவேற்றப்படவில்லைகொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக பகுதிநேர ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பது மாதங்கள் ஊதிய பாக்கியை வழங்காமல் இருப்பது வேதனையானது.  கடந்த 2017ஆம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்தார்.முதலமைச்சர் அளித்த உறுதி மொழியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பும் ஏட்டில் எழுதப்பட்ட ‘சர்க்கரை’யாகவே நீடிக்கிறது.  இனியும் தாமதிக்காமல் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதுடன் கொரோனா கால நெருக்கடிகளை சமாளிக்க ஒரு மாத ஊதியம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;