tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நடிகர் ரஞ்சித் மீது வீசிக புகார்

சென்னை,ஆக.12- ஆணவப்படுகொலை செய்வதற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஞ்சித் மீது   சென்னை காவல்  ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு புகார்  அளித்துள்ளார்

நடிகர் ரஞ்சித், ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், அதை ஊக்குவிக்கிற வகையிலும், அது தவறில்லை என்கிற வகையிலும் பொதுவெளியில் கருத்து களை தெரிவித்துள்ளார். ஆணவக் கொலை தொடர்பாக தமிழகத்தில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும்  என வலியுறுத்தி வரும் நிலையில், அதனை நியாயப்படுத்தும் விதமாக நடிகர் ரஞ்சித் பேசி இருப்பது மிகவும் மோசமான செயல்  என்று வன்னியரசு குறிப்பிட்டுள்ளார்.

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 
தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்!

சென்னை, ஆக. 12 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வரு கின்ற ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெற உள்ள பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்த 8-ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள், https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.