tamilnadu

15 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு இழப்பீடு!

15 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு இழப்பீடு!

புதுச்சேரி, ஜூலை 30- மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் தராததால் புதுச்சேரி தலைமைச்செயலகத்திற்கு ஜப்தி செய்ய நீதி மன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த ராமலி ங்கம் - சுமதி தம்பதியின் மகன் மணி கண்டன். கடந்த 2010 ஆம் ஆண்டு 10 வயது இருக்கும் போது பக்கத்து வீட்டில் வசிப்ப வர்கள் கட்டுமான பணிக்காக மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்து உபயோகித்து வந்தனர். ஆனால் பணிகள் முடிந்த பின்பும் அந்த மின் ஒயரை அப்புறப்படுத்தாததால் மழையின் போது அவ்வழியாக சென்ற மணிகண்டன் மின்சாரம் தாக்கி உயிரிழந் தார். இந்த உயிரிழப்புக்கு மின்துறையின் அலட்சியப்போக்கே காரணம் என கூறி பாதி க்கப்பட்ட தங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி  சிறுவனின் பெற்றோர் புதுச்சேரி நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்க மின்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றமும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உடன டியாக இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தர விட்டது. ஆனால் இதுநாள் வரை இழப்பீடு வழங்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரி நீதி மன்றம் உடனடியாக இழப்பீடு வழங்காத தால் தலைமைச்செயலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. 15 ஆண்டுகளாக போராட்டத்திற்குப் பிறகு ரூ.20 லட்சம் இழப்பீடு பெற நீதிமன்ற அமீனாக்கள் புதன்கிழமை, பாதிக்கப்பட் டவர்களுடன் தலைமைச்செயலகம் வந்து ஜப்தி செய்ய முயன்றனர். இதனையடுத்து சட்டத்துறை செயலாளருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இவர்கள் இது குறித்து கடிதம் தங்களுக்கு வரவில்லை என்றனர். துணைநிலை ஆளுநர் வந்தவு டன் அவரிடம் ஒப்புதல் பெற்று 10 நாட்களுக் குள் இழப்பீட்டு தொகை காசோலை யாக வழங்குவதாக உத்தரவாதம்  அளித்தனர். தொடர்ந்து நீதிமன்ற அமீனா  மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.