tamilnadu

img

தீக்கதிர் சந்தா வழங்கல்

தீக்கதிர் சந்தா வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணா நகர் பகுதிக்குழு சார்பில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 20 தீக்கதிர் சந்தாக்களை புதனன்று (ஜூலை 16) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம், பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன் வழங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு சார்பில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 27 தீக்கதிர் சந்தாக்களை புதனன்று (ஜூலை 16) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம், பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம் வழங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதிக்குழு சார்பில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 14 தீக்கதிர் சந்தாக்களை புதனன்று (ஜூலை 16) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் பகுதிக்குழு உறுப்பினர் செந்தில்குமார் வழங்கினார்.  மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, ஈ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ்,வி.தனலட்சுமி,எஸ்.வி.வேணுகோபாலன்,பகுதிச் செயலாளர் ரவீந்திர பாரதி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தி.நகர் பகுதிக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 25 சந்தாக்களை மாநிலச்  செயற்குழு உறுப்பினர் க.கனகராஜியிடம் பகுதிக்குழு உறுப்பினர் கே.சாந்தி வழங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.