tamilnadu

img

ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்து அலைக்கழித்த அமலாக்கத்துறை!

சென்னை, ஏப்.25- அமலாக்கத்துறை அதிகாரி கள் கடந்த 2023 செப்டம்பரில் தமிழ்  நாட்டில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மணல் குவாரிகளின் முகவர்களாக செயல்பட்டு வந்த தொழில் அதி பர்கள் புதுக்கோட்டை ராமச்சந்தி ரன், திண்டுக்கல் ரத்தினம், கரி காலன் மற்றும் நீர்வளத்துறை அதி காரிகள் வீடுகளில் ரூ. 12.82 கோடி  ரொக்கம், ரூ. 56.86 லட்சம் மதிப் புள்ள 24 கிராம் எடையுள்ள தங்க  நகைகள், மேலும் பல கோடிக்கு  ஆவணங்கள் பறிமுதல் செய்யப்  பட்டன.

தமிழ்நாடு அரசின் நீர்  வளத்துறை முதன்மை பொறியா ளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலு வலகத்தில் நேரில் ஆஜராகி விளக்  கம் அளித்தார்.  இதேபோல திருச்சி, தஞ்சாவூர்,  கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களும், பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட விவ ரங்களுடன் நேரில் ஆஜராகி மணல்  குவாரிகள் தொடர்பாக விளக்கம்  அளிக்க வேண்டும் என்று அம லாக்கத்துறை சம்மன் அனுப்பி யது. இந்த சம்மனை எதிர்த்து, தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், நீர்வளத் துறை கூடு தல் தலைமைச் செயலாளர் மற்றும்  சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது.

வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.  அமலாக்கத்துறையோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோத்கி ஆகியோர் ஆஜராகி  வாதாடினர். ஆனால் கரூர், திருச்சி,  அரியலூர், வேலூர் மாவட்டங் களுக்கும், அமலாக்கத்துறையின் முதல் தகவல் அறிக்கைக்கு எந்த  தொடர்பும் இல்லை. எந்த புகாரும்  கிடையாது.

வழக்கும் கிடையாது. பின்னர் எந்த அடிப்படையில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆட்சி யர்கள் ஆஜராக முடியும்? என கேள்வி எழுப்பினர்.  எனினும், அனைத்து வாதங் களையும் கேட்ட நீதிபதிகள் பேலா  எம். திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகி யோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஏப்ரல் 25 அன்று 5 மாவட்ட ஆட்சியர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டது.

அதன்படி, மாவட்ட ஆட்சியர் கள் பிரதீப் குமார் (திருச்சி), தங்க வேல் (கரூர்), ஆனி மேரி சொர்ணா  (அரியலூர்), தீபக் ஜேக்கப் (தஞ்சா வூர்), சுப்புலட்சுமி (வேலூர்) ஆகி யோர் வியாழக்கிழமை (ஏப்.25)  காலையில் சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள சாஸ்திரி பவனில்  உள்ள அமலாக்கத்துறையின் அலு வலகத்திற்கு வந்து காத்திருந்தனர். வழக்கறிஞர்களும் உடன் வந்தி ருந்தனர்.  ஆனால், தாங்கள் நுங்கம்பாக்  கம் சாஸ்திரி பவன் அலுவலகத்தில் விசாரணை நடத்தவில்லை என்  றும், குஷ்குமார் சாலையில் உள்ள சென்னை மண்டல ஒன்றாவது அலுவலகத்தில் தான் விசாரணை  நடைபெற உள்ளது.

எனவே, அங்கு  வந்து விடுங்கள் என்று அமலாக்கத்  துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, 5 மாவட்ட ஆட்சி யர்களும், தங்களது வழக்கறிஞர்  கள் காரிலேயே குஷ்குமார் சாலை யில் உள்ள அலுவலகத்திற்கு சென்  றனர்.  இந்த வழக்கைப் பொறுத்த வரை, இந்திய ஆட்சிப் பணி அதி காரிகளான மாவட்ட ஆட்சியர் களை விசாரிப்பதற்கு அமலாக் கத் துறைக்கு அதிகாரம் இல்லை  என்பதுதான் தமிழ்நாடு அரசின்  வாதம். எனினும், உச்ச நீதிமன்ற  உத்தரவால் ஆட்சியர்கள் விசா ரணைக்கு ஆஜராகியுள்ளனர்.  

அவ்வாறிருக்கையில், 5 மாவட்ட ஆட்சியர்களையும் அம லாக்கத் துறை அதிகாரிகள் வேண்டுமென்றே அலைக்கழிப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்த அலுவலகத் தில் ஆஜராக வேண்டும் என்பதை அமலாக்கத்துறை முறைப்படி முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

;