சென்னை,மே 7- மெட் லைஃப் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்கள் மருந்து விநியோகம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள கூட்டுச் சேர்ந்துள்ளன. மெட் லைஃப் நிறுவனத்தின் ஆரோக்கியம் தொடர்பான சோதனை கள் மற்றும் நோய் கண்டறியும் பரிசோத னைகளுக்காக ஸ்னாப்டீல் பயன் பாட்டாளர்கள் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்யலாம்- மேலும் இணையதளம் மூலமாக மருந்துகளை ஆர்டர் செய்யலாம். இந்தக் கூட்டாண்மையானது, மெட் லைஃப்-பின் அதிநவீன ஆய்வக சோதனை சேவைகளை, ஸ்னாப் டீல் மூலமாக இந்தியாவின் 400 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று அதன் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.