சென்னை, மே 10-கோவை முன்னாள் மக்களவை உறுப்பினர் மு.ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 87.வயது முதிர்வு காரணமாக வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். வியாழனன்று நள்ளிரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு ராமநாதன் உயிரிழந்தார். கோவை ராமநாதன் கோவை தென்றல் என்று அழைக்கப்பட்டவர். கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர் ஆவார்.1971-76 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 1984-89 வரை கோவை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். 1996 கோவை தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.மு.ராமநாதன் மாநகர செயலாளர் உள்பட பல பதவிகளை வகித்தார். ராமநாதனுக்கு ராமகாந்தம் என்கிற மனைவியும், பன்னீர் செல்வம், இளங்கோவன், மு.இரா. செல்வராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ராமநாதன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் திருச்செங் கோடு எம்.பி., கந்தசாமி உள்பட தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
மு.ராமநாதன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவரது மறைவு அவரது உறவினர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் இந்த இயக்கத்தின் கோடானு கோடி தொண்டர்களுக்கும், கொங்கு மண்டல மக்களுக்கும் பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.