tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு  

கோவை, ஆக,7- ரெட் அலர்ட் காரண மாக தற்காலிகமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் - நீர்வரத்து சீரான தால் மீண்டும் திறக்கப் பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்க ளில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்குகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அருவியில் குளித்து மகிழ்ந்தும், அங்கு உள்ள தொங்கு பாலத்தில் இயற்கையை ரசித்த படி நடந்து சென்றும் மகிழ்ச்சி அடைகின்றனர். கடந்த 5 ம் தேதி கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப் பட்டு இருந்தது. மேலும் சிறுவாணி அடிவாரப் பகுதி களில் கன மழை பெய்த காரணத்தால், கோவை குற்றால அருவி யில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரண மாக சுற்றுலா பயணிக ளுக்கு தடை விதிக்கப் பட்டது. இந்த நிலையில் மழைப் பொழிவு குறைந்ததால், அருவியில் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால் மீண்டும் வியாழக்கிழமை (ஆக.7)  முதல் கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அறி வித்துள்ளனர். வனத்துறை யினரின் அறிவிப்பை அடுத்து இன்று முதல் அதிக அளவில் சுற்றுலா பய ணிகள் கோவை குற்றால அருவிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியை அடித்ததில் மயங்கி விழுந்த  மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை

திருவண்ணாமலை, ஆக. 7- திருவண்ணாமலை நகரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தர் மற்றும் அவரது மனைவி கலை வாணி ஆகியோரின் மகள் அக்ஷயா, திரு வண்ணாமலை தேரடி வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அக்ஷயாவின் அக்கா ஸ்ரீமதி கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அக்கா இறந்த துக்கத்தில் அக்ஷயா இருந்து வந்துள்ளார். கடந்த 4 ஆம் தேதி அக்ஷயா பள்ளிக்கு கால தாமதமாக சென்றபோது, பள்ளி ஆசிரியை ஒருவர் அக்ஷயாவை முட்டி போட வைத்துள்ளார். மறுநாள் 5ஆம் தேதி மீண்டும் மாணவி அக்ஷயா பள்ளிக்கு கால தாமதமாக சென்றுள்ளார். வகுப்பில் வருகைப் பதிவேடு எடுப்பது, அக்ஷயா பதில் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த ஆசி ரியை அக்ஷயாவை அழைத்து மற்ற மாணவி கள் முன்னிலையில் திட்டி, முடியைப் பிடித்து இழுத்து தலையில் அடித்து ள்ளார். இதனால் மாணவி அக்ஷயா வகுப்பறை யிலேயே மயங்கி விழுந்துள்ளார்.  பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவி பெற்றோர்களிடம் தலை வலிப்பதாகவும், ஆசிரியை தன்னை அடித்ததையும் தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவி அக்ஷயாவை பெற்றோர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் பள்ளியில் களஆய்வு மேற்கொண்டபோது, பள்ளி தலைமை ஆசிரியர் "இதனைப் பெரிது படுத்த வேண்டாம், பேசி சமாதானம் செய்து கொள்கிறோம்" என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதையடுத்து பள்ளி ஆசிரியர் மீது உரிய விசாரணை செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இந்திய மாணவர் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் மறியல்  

ஆரணி, ஆக.7 திருநங்கைகளுக்கு  இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டி தராத தமிழக அரசை கண்டித்து 70 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வியாழனன்று (ஆக.7)  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள்  கோரிக்கைகளை  முழக்கமிட்டனர். இதனால் ஆரணியி லிந்து  -சென்னை, வந்த வாசி, செய்யாறு பகுதி களுக்கு செல்லும் வாக னங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தக வல் அறிந்து வந்த ஆரணி வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தினார்.