tamilnadu

img

புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகள் முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக.11- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ரூ.14.90 கோடியில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளின் சேவையை  பொதுமக்களின் பயன் பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (ஆக.11) சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மேம்படுத்தும் வகையில், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகளை ரூ. 152.50 கோடியில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதன் முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 61 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 15 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 37 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 32 பேருந்துகளும், என மொத்தம் 100 பேருந்துகள் 41 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.