திருவண்ணாமலை, ஜூலை 13- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் துப்புறவு பணி தனியார் மய மானதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அரசு பணமும் விரய மாவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். செங்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நீர்த்தோட்டம் மகளிர் குழு மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆண்கள் குழு ஆகிய குழுக்கள் கடந்த 15 ஆண்டுகளாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். துவக்கத்தில் இவர்களுக்கு தினசரி 20 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டது. தற்போது இந்த பணியில் 96 தொழிலா ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தினசரி 200 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. இந்தப் பணி யினை பேரூராட்சி செயல் அலுவலர் நிர்வ கித்து வந்துள்ளார். தற்போது துப்புரவு பணியினை மேற்கொள்ள தனியார் நிறு வனத்திடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நேரடியாக தொழி லாளர்களை துப்புரவு பணிக்கு பயன்படுத்தி, அதற்கு கூலியாக கொடுக்கும் தொகையை விட, தனியார் நிறுவனத்திற்கு பல மடங்கு அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் விட்டுள்ள தாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டு கின்றனர். கடந்த ஜூலை 4ஆம் தேதி வியாழ னன்று, துப்புரவு பணி செய்து வந்த 96 தனி யார் நிறுவனம் தொழிலாளர்களின் எண்ணிக் கையை குறைத்து, 46 துப்புரவு தொழிலா ளர்களுக்கு மட்டும் பணி வழங்குவதாக அறி வித்துள்ளது. அதை ஏற்க மறுத்த துப்புர வுப் பணியாளர்கள், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என கடந்த 5ஆம் தேதி முதல் செங்கம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடபட்டு வரு கின்றனர். இதுகுறித்து துப்புரவு தொழிலாளர்கள் சிஐடியு சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சிய ருக்கு 15 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த 96 தொழிலாளர்களுக்கும் வேலை உத்தரவு வழங்க வேண்டும். துப்புரவு பணிகளை செயல்படுத்த, தனியாரிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து, பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து வெள்ளியன்று திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கணபதி தலைமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் இரா.பாரி, நிர்வாகிகள் எம்.வீர பத்திரன், ஏ.நடராசன், நாகராஜ், கே.சரவ ணன், எம்.ரவி, துப்புரவு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் வீராசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், ஏ.லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.